Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், எம்.ஸ்.எம்.நூர்தீன்,தீஷான் அஹமட்
எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், இன்று (23) தெரிவித்தார்.
இம்மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் 3 ஆயிரம் வெற்றிடங்களும் ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பாடசாலைகளில் காவலாளிகளுக்கான வெற்றிடங்கள், நூலக உதவியாளர்கள், காரியாலய உதவியாளர்கள் ஆகியவற்றுக்கு 1,000 வெற்றிடங்கள் நிலவுவதுடன், இந்த வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல வருடங்களாகப் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்று பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி சிரமத்தை எதிர்நோக்குகின்றமை கவலை அளிக்கின்றது.
கணிசமான பட்டதாரிகளை அரசாங்கத் தொழிற்றுறையில் விரைவில் இணைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இம்மாகாணத்திலுள்ள அரசாங்கத் தொழிற்றுறையிலுள்ள வெற்றிடங்களைக் கடந்த ஆட்சியாளர்கள் சரியாக அடையாளம் காணாமையும் அதற்குப் பட்டதாரிகளையும் ஏனையோரையும் உள்வாங்குவதற்கான பொறிமுறைக்கு அடித்தளம் இடாமையுமே வேலைவாய்ப்புக்கான பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தமக்கு எவ்வாறான சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும்போதும்;, வேலையற்ற
பட்டதாரிகளுக்கு விடிவுகாலத்தை ஏற்படுத்தவும் இம்மாகாணத்தில் காணப்படும் வேலை இல்லாப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவும் முழு முயற்சி எடுப்பதாகவும் அவர் கூறினார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025