2025 மே 07, புதன்கிழமை

'கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் அபாயம்'

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் மாகாண கல்வி அமைச்சு ஆற்ற வேண்டிய சில வேலைத்திட்டங்கள் எங்களது இயலாமை காரணமாக முதலமைச்சரினால் மேற்கொள்ளப்படுகின்றன.இதன்காரணமாக தமிழ் பாடசாலைகளும் மக்களும் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளிகளுக்கு உள்ளூராட்சி சபைகள் ஊடாக ஒதுக்கீடுகளைப்பெற்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை மேற்கொண்ட போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமாகவிருந்தால் அதற்கு சர்வதேச விசாரணை தேவையென நாங்கள் கோரிக்கை விடுத்துவருகின்றோம். ஆனால் சில முதிர்ந்த அரசியல்வாதிகள் சர்வதேச விசாரணைகள் நடைபெற்றுவிட்டது,சர்வதேச விசாரணை இனி எதற்கு என கூறுகின்றனர்.

நாங்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்க வேண்டும்.கடந்த காலத்தில் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த நாங்கள் மீண்டும் ஒரு இழப்பினை சந்திக்ககூடாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X