Niroshini / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
19வது திருத்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீனக் கமிஷன்களுக்கு சகல இனத்தவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்களை நியமிக்குமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நாம் வெற்றி பெற்ற ஒரு தேசமாக வருவதற்குரிய சகல வாய்ப்புக்களையும் இழந்து தோல்வியுற்றிருக்கின்ற நிலையில் எமது எதிர்காலம் குறித்து புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன.
100 நாட்கள் அரசாங்கத்தின்போது மேற்கொள்ளப்பட்ட 19வது திருத்தப் பிரேரணை அரசாங்கத்தின் பல நிறுவனங்களையும் ஜனநாயக மயப்படுத்தக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நிறுவாகத்தின் பல முக்கிய பகுதிகளுக்கும் நிறுவங்களுக்கும் சுயாதீன கமிஷன்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.
துருவப்படுத்தப்பட்டுள்ள எமது தேசத்தின் மக்களான சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பகூடிய ஒரு அருமையான சந்தர்ப்பமாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதனைக் கருதுகின்றது.
எனவே, அனைத்து கமிஷன்களுக்கும் உறுப்பினர்களை நியமனம் செய்யும்போது மலையகத் தமிழர்கள் உட்பட சகல இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகைகளில் உறுப்பினர்களைத் தெரிவு செய்யுமாறு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கின்றது எனவும் குறிப்படப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago