Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கு திரவியியல் ஆய்வு நிலையத்தின் ஆய்வுக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னராக, மண்மூடைகளை போட்டு முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.
காத்தான்குடி கடலரிப்பு தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தாரர்
அவர் மேலும் கூறுகையில்,
காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள இந்த கடலரிப்பை நிரந்தரமாக தடுப்பதற்கு திரவியியல் ஆய்வு நிலையத்துக்கு இது தொடர்டபாக அறிவித்துள்ளோம். அந்த நிலைய அதிகாரிகள் இதனை ஆய்வு செய்த பின்னர் இதற்கான நிரந்தரமான தீர்வு தொடர்பில் ஆராயப்படும்.
அதற்காக திட்டங்களை தயாரித்து இதனை நிரந்தரமாக தடுக்க நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்,இன்று ஒலுவில் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் அங்குள்ள பல நிலங்கள் கடலுக்குள் சென்றுள்ளன.
இதனை தடுப்பதற்கான நடவடிக்கையினையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கடல் அரிப்பை தடுப்பதற்கு நிரந்தர கேபியன் தடுப்புச்சுவர் அமைப்பதற்குரிய மதிப்பீட்டை துரிதமாக மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
29 minute ago
58 minute ago
1 hours ago