2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'தமிழர்களின் பிரச்சினைகளை பெரும்பான்மையின மக்களுடன் பேச வேண்டும்'

Suganthini Ratnam   / 2017 மார்ச் 01 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,கே.எல்.ரி.யுதாஜித்
 
'தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையின அரசியல் தலைவர்களுடன் மாத்திரம் பேசிக்கொண்டிருக்காமல் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அம்மக்களின் பிரச்சினைகளைப்  பேச வேண்டும். அவர்களின் ஆதரவுடன் செல்வோமானால்இ இந்த நாட்டில் இனவாதஇ மதவாத தலையீடு இல்லாத வகையில் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்' எனத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்

'இனவாதஇ மதவாத அமைப்புகள் தங்களின்  பிரசாரங்களால் பெரும்பான்மையின மக்கள் எம்மை எதிரிகளாக நோக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளார்கள்' எனவும் அவர் கூறினார்.  
 
வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (28) மாலை நடைபெற்றது. இதில்  கலந்துகொண்டு உரையாற்றியபோதேஇ அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோதுஇ 'கடந்தகால ஆட்சியாளர்களுடன் ஒப்பிடுகையில்இ  நல்லாட்சியில் பல முன்னேற்றகரமான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்;இ மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு  நல்லாட்சியில்; வேகம் காணப்படவில்லை.
 
இந்த ஆட்சியில் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இராஜதந்திரமாகச் செயற்படுகின்றது' என்றார்.
 
'தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளுக்குள் வேறு வேறு நிகழ்ச்சிநிரல் இருந்தாலுமஇ; தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியான தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X