Suganthini Ratnam / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கடந்த யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு காணிப் பிரச்சினை காணப்படின், அது தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டுவந்தால், அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கும் நடவடிக்கை, ரணவிரு அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்;டக்களப்பு டேபா மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போது 500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு வாழ்வாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் தைய்யல் இயந்திரங்கள் வழங்கப்பட்டதுடன், தொழிற்பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'மட்டக்களப்பில் மாவட்டத்தில் ரணவிரு அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படைத் தரப்பினரின் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் இந்த அதிகார சபையை இங்கு ஸ்தாபித்துள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் இதன் மூலமாக ஊடாக மேற்கொண்டு வருகின்றோம்' என்றார்.

8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025