Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
காட்டு யானைகளை விரட்டுவதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதச செயலகத்தின் வாயிற் கதவை பூட்டியும் மண்டூர்-மட்டக்களப்பு பிரதான வீதியை வழிமறித்தும் போரதீவுப்பற்று பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போரதிவுப்பற்று பிரதேசத்திலுள்ள சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில்,அரசாங்க அதிபர் உரிய இடத்துக்கு வருகை தந்து நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் வரையில் தாம் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த போரதீவுப்பற்று பிரதச செயலாளர் என்.வில்வரெத்தினம் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரகிக்க சம்மபத் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்ககளுடன் கலந்துரையாடி இது தொடர்பில் உரிய தீர்வை உடன் பெற்றுத்தருவோம் என உறுதியளித்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
தாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதால் தற்போது இவ்விடத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வருகை தந்து காட்டுயானைகளின் தொல்லைகளுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒருமாத காலப் பகுதிக்குள் காட்டு யானை தாக்குதல் காரணமாக 5 பேர் மரணமடைந்துள்ளதுடன் 40 இற்கும் மேற்பட்ட வீடுகளும் தோட்டங்களும் சேதமாக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago