Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
நெல்லைப் பதுக்குவோர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, பதுக்கி வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
இந்த நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்த நெல் பதுக்கல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, இச்சோதனையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
பட்டிப்பளைப் பிரதேசத்துக்கான அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (15) மாலை நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'நெல் கொள்வனவு தொடர்பில் அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவலை பிரதேச செயலங்களில் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
மேலும், அக்கூட்டத்தில் பட்டிப்பளையிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன் சட்டவிரோத மண் அகழ்வு, யானைகளினால் ஏற்படும்; பிரச்சினைகள், விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு, அவை தொடர்பில் ஆராயப்பட்டன.
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
9 hours ago