Niroshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
முதியவர்களைக் கணம் பண்ணவேண்டிய பொறுப்பு இளைய தலைமுறையினருக்கு உள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் முதியவர்களைக் கணம் செய்வதிலிருந்து இளைய தலைமுறையினர்கள் நழுவுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனால்தான் தற்போது முதியோர் இல்லங்களிலும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையொட்டி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் மற்றும், முதியோர் தின நிகழ்வு களுவாஞ்சிகுடி சி.மு.இராசமாணிக்கம் மண்டபத்தில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இன்றய இளைஞர்கள் நாளை முதியவர்களாகப் போகின்றார்கள் என்பதையும் மனதில் இருத்திக் கொண்டு தற்போதைய இளைஞர்கள் செயற்பட வேண்டும்.24 மணித்தியாலமும் இரவு, பகல் பாராது கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த பெற்றோர்களை, பிள்ளைகள் வணங்க வேண்டும். இளைஞர்கள் தமது பெற்றோர்களை வணங்கிவிட்டு தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மனதில் நினைத்திருக்கும் எண்ணங்கள் ஈடேறி இந்த நாட்டில் பிரபல கல்விமான்களாக மிளிரமுடியும்.
இந்நிலையில் பிள்ளைகளை உறவினர்களின் பொறுப்பில் விட்டுவிடாது பெற்றோர்களின் கண்காணிப்பில் வைத்து நல்லொழுக்க சீலர்களாக இந்த நாட்டில் மிளிரச் செய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோர்களிடத்தில் உள்ளது என்றார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago