Niroshini / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
இழப்புகளை பழிவாங்கும் எண்ணமாக மாற்றிக்கொள்ளாமல் அதனை மறந்து மனிதத்துவத்தினை வளர்த்து அனைவரும் ஒன்றுபட்ட சூழலில் வாழும் நிலைமையை ஏற்படுத்தவேண்டும; என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.
தைப்பொங்கலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரடித்தீவு சக்தி சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு உடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(11) காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் மதத்தினால் வேறுபட்டாலும் மனிதர்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இங்கு உங்களுக்கு உதவி வழங்கியுள்ளவர் ஒரு சிங்கள சகோதரர். அவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை வழங்கியுள்ளார்.
நாங்கள் இழப்புகளை எதிர்கொண்டாலும் அந்த இழப்புகளை பழிவாங்கும் எண்ணமாக மாற்றிக்கொள்ளாமல் அதனை மறந்து மனிதத்துவத்தினை நாங்கள் வளர்த்து அனைவரும் ஒன்றுபட்ட சூழலில் வாழும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.அன்பு என்ற ஒன்றுமட்டுமே எம்மை மனிதர்களாக மாறவைக்கும். நாங்கள் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்றார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago