Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் ஒரு வாரத்துக்குள் விசர் நாய் கடிக்குள்ளாகி ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் இன்று தெரிவித்தார்.
இதில் காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மூன்று சிறுவர்களும் இரண்டு பெரியவர்களும் அடங்குகின்றனர்.
இது தொடர்பில் மேற்படி வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் மற்றும் குறித்த நாய்க்கடிக்குள்ளான ஒருவர் வழங்கிய தகவலை வைத்து காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள குறித்த நாயை பிடித்து அதன் உடல் பாகமொன்று பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விசர் கடி நாய் கடியிலிருந்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதுகாத்துக் கொள்ளுமாறும் நாய் கடித்தால் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் காத்தான்குடியிலுள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக விசர் நாய் க தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
காத்தான்குடியில் விசர் நாய் கடி அச்சுறுத்தல் தொடர்பாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago