2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்தில் இளைஞர் பலி: மூவர் கைது

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்ர்கான்

காத்தான்குடி, ஆரையம்பதியில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (30)  இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரின் நண்பர்கள் மூவரை இன்று கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதிக்கு  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். இவர்கள் மோட்டார் சைக்கிள்களை வேகமாகச் செலுத்தியதால்,  இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது படுகாயமடைந்த நான்கு இளைஞர்களும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த சலீம் முகம்மட்; சப்னி (வயது 17) என்பவர் கடந்த திங்கட்கிழமை  (1)  உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூன்று இளைஞர்களும்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்; தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X