2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விருது வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்ரி.யுதாஜித்

கிழக்கிலங்கை சர்வதேச பாடசாலையின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி மண்டபத்தில் பாடசாலையின் இயக்குனர் தனுஜா மௌலானாவின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி,  மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலான, கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, பாடசாலையில் சாதனைப் படைத்த மாணவர்களும் ஆசிரியர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பெற்றோர்களினால் அலிசாகிர் மௌலான மற்றும் தனுஜா மௌலானா ஆகியோர் வழங்கி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X