2025 மே 07, புதன்கிழமை

வர்த்தகக் கண்காட்சி

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளிலான வாழ்வின் எழுச்சி வர்த்தகக் கண்காட்சி நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு,போரதீவுப்பற்று  பிரதேசத்தின் தும்பங்கேணியில் நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச வாழ்வின் எழுச்சி திணைக்கள போரதீவுப்பற்று பிரதேச முகாமையாளர் க.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரெத்தினம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, போரதீவுப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வி.ஆர்.மகேந்திரன், போரதீவுப்பற்று பிரதேச கருத்திட்ட உதவியாளர் எஸ்.நவரெத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது 10 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 10 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்துக்குரிய பொருட்களும் தெரிவு செய்யப்பட்ட 59 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X