2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் 100 உலருணவுப்பொதிகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரில் பொதி செய்யப்பட்ட நிலையில், வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்ட 100 உலருணவுப் பொதிகளை புதன்கிழமை (14) அதிகாலை  தாம் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பொதிகளில் அரிசி, பருப்பு, பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் உலருணவுப் பொதிகளை விநியோகித்திருந்தன.

அவ்வாறு மக்களுக்கு விநியோகிப்பதற்காக  கொண்டுவரப்பட்ட உலருணவுப் பொதிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருதாகவும்  பொலிஸார்  கூறினர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X