Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
154ஆவது பொலிஸ் வீரர்கள் தினம், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை முன்றலில் இன்று (21) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர பிரதம அதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.மெண்டிஸ், சர்வமதத் தலைவர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
பயங்கரவாதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் உறவினர்களும் பொலிஸ் அதிகாரிகளும், உயிர் நீத்த பொலிஸாரின் நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை 457 பொலிஸார் உயிரிழந்துள்ளனர் என, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயயசேகர தெரிவித்தார்.
“21.3.1864 அன்று, சபான் எனும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்த நினைவு நாளையே, பொலிஸ் வீரர்கள் தினமாக அனுஷ்டித்து வருகின்றோம்.
மேலும், “அந்த வகையில், கடந்த கால யுத்த சூழ்நிலையின் போதும் பல்வேறு சம்பவங்களின் போதும் கொல்லப்பட்டு உயிரிழந்த பொலிஸாரின் நினைவு நாளாக இந்த நாளை அனுஷ்டிக்கின்றோம். பொலிஸ் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் பணியாற்றி வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

21 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025