2025 மே 05, திங்கட்கிழமை

18 வயதுக்கு குறைந்த பெண்கள் கருத்தரிப்பதை குறைப்பதற்கான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


18 வயதுக்கு குறைந்த பெண்கள் கருத்தரிப்பதை குறைப்பதற்கான விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில்  சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு  மேற்கொண்டு வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இது தொடர்பான செயலமர்வு  நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்போது 18 வயதுக்கு குறைந்த பெண்கள் கருத்தரிப்பதினால் ஏற்படும் பாதிப்புக்கள் உள்ளிட்டவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர், காத்தான்குடி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எச்.பி.எம்.சில்மி தாஜுதீன், எம.ச்.யு.றஸ்மினா பேகம், கிராம உத்தியோகத்தர்கள்,  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், இளவயதுப் பெண்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X