2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

200 குடும்பங்களுக்கு பரோபகாரிகளால் குடிநீர் விநியோகம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எல்.ஜவ்பர்கான்


சுனாமியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்ததைச்சேர்ந்த 200 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு சவூதி அரேபிய அரசினால் செவ்வாய்கிழமை(29) இலவச குடிநீர் விநியோகத்திற்கான காசோலைகள் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழவில், சவூதி நாட்டு பரோபகாரிகள் காசோலைகளை மக்களுக்கு கையளித்தனர்.

காத்தான்குடி, புதியகாத்தான்குடி, ஆரையம்பதி, நாவற்குடா, செல்வாநகர், பூநொச்சிமுனை உட்பட பல கிராமங்களைச்சேர்ந்த மக்கள் இதன்மூலம் இலவச குடிநீரை பெற்றுக்கொண்டனர்.

சவூதி அரேபிய பரோபகாரிகளான காலித் பின் தாவூத் மற்றும் அஸ்ஸெய்க் அப்துல் அஸீஸ், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புலலாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுகள உள்ளிட்ட  பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X