2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

2000 குளங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் குளங்கள் புனரமைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் '2000 குளங்கள் புனரமைப்புத் திட்டம்;' கீழ் குளங்கள் மட்டக்களப்பில் குளங்களை புனரமைக்கும் பணி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஜவினால் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கமைவாக கண்டியனாறு மற்றும் இரும்பண்ட குளம் என்பவற்றின் புனரமைப்புப பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இக்குளங்கள் உயர்த்தப்பட்டு வான்கதவுகள் அமைக்கப்படுவதனுடாக நீரின் கொள்ளளவினை அதிகரித்து காலபோக விவசாயச் செய்கையின் அளவை அதிகரிக்க உள்ளனர்.

இதனுடாக கண்டியனாறு, இரும்பண்ட குளம், பன்சேனை, பாவற்கொடிச்சேனை, காந்தினகர் கிராமங்களில் உள்ள விவசாயிகள் நேரடியாக பயன் பெறுவதுடன் பட்டிப்பளை, வவுணதீவுப் பிரதேச விவசாயிகளும் பயன்பெறவுள்ளனர்.

இரும்பண்ட குளம் 70 இலட்சம் செலவிலும், கண்டியனாற்று குளம் 90 இலட்சம் செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.

பொருளாதார அமைச்சின் மீள் எழுச்சித் திட்ட கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.கே.லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், வவுணதீவு பிரதேச சபை தவிசாளர் கா.சுப்பிரமணியம் அகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .