2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மன்னம்பிட்டி ஆற்றில் வான் கவிழ்ந்தது: நால்வர் பலி; இருவரை காணவில்லை

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு - கல்முனை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மன்னம்பிட்டி பாலத்தின் கீழ் வான் ஒன்று குடை சாய்ந்ததில் அதில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளனர். இன்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதமுனையை சேர்ந்த வைத்தியர் ஆசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் மொத்தம் ஏழுபேர் குறித்த வானில் பயணித்துள்ளனர். மன்னப்பிட்டி பாலத்தினை வான் கடக்கின்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வான் ஆற்றினுள் வீழ்ந்துள்ளது. வைத்தியரை உடனடியாக காப்பாற்றிய ஊர்மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு நால்வரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். ஏனையவர்களை இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். தேடும் பணியில் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி:

மன்னம்பிட்டி ஆற்றில் வீழ்ந்து பலியான  6 பேரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு

மன்னம்பிட்டி வான் விபத்தில் பலியான 6 பேரின் ஜனாஸாக்களும் நல்லடக்கம்


  Comments - 0

  • CIDDEEQUE Saturday, 30 April 2011 04:27 PM

    இந்த ஆற்றில் இந்த வான் maaththiram இல்ல police jeep utpada pala vaakanangalai pali waanki ullathu. இந்த paalaththin peyar koddali enpaarkal. pakal neraththil payanippathe payam, iravil eppadi? paathukaappu atrathu இந்த paalam. arasinaal kooda ontrum sayya mudiyaathullathu. 30mtr தூரம்தான் இந்த பாலத்தின் நீளம்?

    Reply : 0       0

    A.Riyal Saturday, 30 April 2011 05:06 PM

    இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்களை நான் எதிர் பார்க்கிறேன் தயவு செய்து பதியவும்

    Reply : 0       0

    CIDDEEQUE Saturday, 30 April 2011 11:12 PM

    Polonnaruwa யில் வசிப்பவர்களுக்கும் Eastern யில் வசிப்பவர்களுக்கும் இந்த பாலத்தினால் வாகனம் ஓட்டும் போது வரும் பயத்தை அறிய அவ்விடத்தினால் சென்று பாருங்கள். அந்த பாலமானது, சாதாரணமாக ஒரு வாய்க்கால் ஒன்றுக்கு இருப்பது போலவே இருக்கின்றது. பாலத்துக்குக் கீழே புதைகுழிகள் வேறு.

    Reply : 0       0

    Mohamed Riskan Saturday, 07 May 2011 04:17 PM

    இதுவரைக்கும் நிறைய விபத்துக்கள் நடந்தும் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுபடவில்லை. இனிமேலாவேது அரசாங்கம் தகுந்த முறையில் பாலத்தினை அமைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .