Super User / 2011 மே 07 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பட்ட தாய் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவசரமாக தனியார் வைத்தியசாலையில் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை புதிதாக கடமையேற்று போதனா வைத்தியசாலையின் பிரசவ விடுதிக்கு பொறுப்பாக வந்த
வைத்திய அதிகாரி குறித்த கர்ப்பிணித் தாயை வீட்டுக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு இடை நடுவே அதிகமான வலி ஏற்பட்டதையடுத்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடு சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது.
குறித்த கர்ப்பிணித் தாயை ஏற்கனவே பரிசோதித்த வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை குழந்தை பிறக்கும் திகதி என்பதால் வைத்தியசாலைக்கு வருமாறு கூறியுள்ளார்.
இவரை திடீரென விடுவித்தமையினாலேயே ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் ஆறு கர்ப்பிணித் தாய்மார்கள் திடீரென இவ்வாறு விடுவிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் பொன். ரவீந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் வைத்தியசாலை பணிப்பாளரைச் சந்தித்து
முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அபிவிருத்திக் குழுவினர் பணிப்பாளரிடம் கேட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தத்திடம் கேட்டபோது,
இது தொடர்பில் தன்னிடம் குறிப்பிட்ட நோயாளி இதுவரை எந்தவிதமான முறைப்பாட்டினையும் செய்யவில்லை எனவும் அவ்வாறு ஏதாவது முறைப்பாடுகள் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .