2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

குறுகிய காலத்தில் சாதனை படைக்கும் மாணவனாக மாற்றுவது சாதாரண விடயமல்ல: மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

குறைந்தகால அவகாசத்தில்  மாணவன் ஒருவனை கராத்தே போன்ற துறைகளில் பயிற்றுவித்து போட்டிகளில் ஈடுபட வைத்து  அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்திற்கு கொண்டு வருவது என்பது சாதாரண விடயமல்ல. அதனைச் செய்து வரும் சோட்டோகான கழகம் பாராட்டுக்குரியதென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சோட்டோகான் கழகத்தின் மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரிவின் கிளையினரால் சந்திவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

பயிற்றப்பட்ட மாணவர்கள் அவர்களுடைய பயிற்சிகளைச் செய்து காட்டும்போது அவர்களுடைய நேர்த்தியையும் திறமையையும் காணக்கூடியதாக இருந்தது. தற்போது இச்சங்கத்தில் 5,000க்கும்  அதிகமாகவுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும்.

அக்கால சூழ்நிலை காரணமாக எங்களது சிறுபிராயத்தில் இவ்வாறான பயிற்சிகளை எங்களால் முழுவளவில் பயிலமுடியாதிருந்தது. தற்போது நல்லதொரு சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனைப் பயன்படுத்தி நீங்கள் அனைவரும் கராத்தேக் கலையில் கைதேர்ந்தவர்களாக திகழ வேண்டும் என்றார்.

பயிற்சிகளை நிறைவு செய்த 68 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.   இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், மீள்குடியேற்ற அதிகாரசபைப் பணிப்பாளர் சத்தியவரதன், சோட்டோகான் கழகத்தின் போதனாசிரியர் பிரகாஸ், பயிற்றுவிப்பாளர்களான குகதாசன், ஆலயப் பிரதமகுரு, நிர்வாகசபை உறுப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .