2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்தால்

Menaka Mookandi   / 2011 மே 09 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஆர்.அனுருத்தன், ஸரீபா)

கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் இன்று ஹர்தால் கடையடைப்பு இடம்பெறுகின்றது. கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மினுமினுத்தான் மேற்கு எனப்படும் விவசாய கண்டத்திலிருந்து முஸ்லிம் விவசாயிகளை வெளியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையினை கண்டித்தே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்துடன் ஒற்றுமையை வலியுறுத்தியும், கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கோறளைப்பற்று மேற்குக்குரிய ஐந்து கிராமங்களான கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனை, வாகனேரி, புணானை ஆகிய கிராம சேவகர்பிரிவுகளை கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க வேண்டுமென தெரிவித்தும் இந்த ஹர்தால் கடையடைப்பு இடம்பெறுகின்றது.

இந்த ஹர்தால் காரணமாக கல்குடா தொகுதியிலுள்ள ஓட்டமாவடி, வாழைச்சேனை, மிறாவோடை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் வர்த்தக ஸ்தாபனங்கள், அரச தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் இப்பிரதேசங்களின் இயல்புநிலை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. எவ்வித தடையுமின்றி போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. ஹர்தால் இடம்பெறும் இப்பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். (படங்கள்: ஆர்.அனுருத்தன்)   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .