Menaka Mookandi / 2011 மே 09 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித்)
மன்முனை வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று மன்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் மன்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராசா உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவுபெறத திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் மெற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் புதிய திட்டங்களும் இதன் பொது மும்மொழியப்பட்டன.
.jpg)
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026