Kogilavani / 2011 மே 10 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதியமைச்சர்களான பசீர் சேகுதாவூத், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன் உட்பட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திவிநெகும போன்ற திட்டங்கள் தொடர்பில் கலந்துரயாடப்பட்டன.
.jpg)
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .