Kogilavani / 2011 மே 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ரி.லோஹித், ஜிப்ரான்)
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் பட்ரிஷியா புட்டெனிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். மட்டக்களப்பில் ஐக்கிய அமெரிக்க உதவித்திட்டமான யு.எஸ்.எய்ட். நிதியுதவியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை அவர் பார்வையிட்டார்.
அதையடுத்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட அவர் அங்கு கணினி மற்றும் ஆங்கில பயிற்சி வகுப்புக்களை முடித்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்விலும் கலந்துக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினரைச் சந்தித்து வர்த்தக மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றியும் அவர் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில், அமெரிக்க தூதரகத்தின் மனிதவள முகாமையாளர் ரோய் சிறினி, சம்மேளனத்தின் சார்பில் தலைவர் ரஞ்சிதமூர்த்தி, செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வர்த்தகத்துறையினருக்குள்ள தேவைகள், அவர்களுடைய குறைபாடுகள், பணம் சார்ந்த உதவிகள் குறித்து அமெரிக்க உயர்ஸ்தானிகர் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாயச் சம்மேளனத்தினரிடம் கேட்டறிந்து கொண்டார்.
'விதவைகளுக்கான தேவைகள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள், யுத்தம் நிறைவு பெற்றபின்னர் மிகவும் தேவையாகவுள்ளன. அந்தவகையில் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவதற்கான திட்டங்களை எமது நாடு விரைவில் முன்வைக்கவுள்ளது.
அதேபோன்று இப்போதும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமது உறவினர்களைப்பிரிந்து வாழ்பவர்கள் உள்ளனர். அவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன'' என அவர் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026