Suganthini Ratnam / 2011 மே 11 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்,ஜிப்ரான்,அதிரன்)
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் பரிபாலன சபை செயலாளர் இராசமாணிக்கம் மதியழகன் (38) இன்று பகல் சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லடித்தெரு வாவிக்கரை - 2 இலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் இருவர் மதியழகனை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைப்பாளர்களில் ஒருவராவார்.
இவரது சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலி மூலம் நடமாடி வந்தார். (படங்கள்: சுக்ரி)
.jpg)
46 minute ago
2 hours ago
ajan Wednesday, 11 May 2011 11:03 PM
அப்போது தான் புலிகள் என்று சொல்லுவார்கள் இப்போது ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago