2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

அமெரிக்க தூதுவர் – மட்டு. மேயர் சந்திப்பு

Super User   / 2011 மே 11 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டு கொலை செய்ததற்கு மட்டக்களப்பு மாநகர சபையின் சார்பில் அமெரிக்காவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அமெரிக்கா நாட்டுத்தூதுவர் பட்றீசியா ஏ புட்டெனிஸ் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்து மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களையும் சந்தித்தார்.

இதன்போது உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ராஜேந்திர பிரசாத் மேற்கண்டவாறு கூறினார்.

உலக பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொலை செய்தமைக்காக நான் அமெரிக்காவுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் சார்பில் நன்றிகளை தெரிவிக்கின்றேன் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது யு.எஸ்.ஐட் நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .