2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 மே 12 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேச மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடமாடும் சேவை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது.

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை ஏற்பாடு செய்த காணிப்பிரச்சினைக்கான நடமாடும் சேவை மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா தலைமையில் நடைபெற்றது.  இதில் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான யு.எல்.முபீன் கே.எல்.பரீட் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் சேவையில் தமது காணி தொடர்பில் பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். (படப்பிடிப்பு:-எம்.சுக்ரி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .