2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பெண்கள் மாநாடு

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பெண்கள் மாநாடு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண பெண்கள் பிரிவு இணைப்பாளரும் காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் ஏற்பாட்டில் அவரது தலைமையில் இப்பெண்கள் மாநாடு நடைபெற்றது.

இம்மாநட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சரமான பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ளான் உட்பட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .