2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காத்தான்குடியில் மௌலவி ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்

Kogilavani   / 2011 மே 13 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடியில் மௌலவி ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதலொன்று  இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியிலுள்ள காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் மௌலவி ஆசிரியராக கடமையாற்றும் எம்.எச்.சாஜஹான் என்பவரின் விட்டின் மீதே இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை மூன்று மணியளவில்  இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வீசப்பட்ட கைக்குண்டு உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பெற்றோல் குண்டு எனவும் இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேற்படி மௌலவி சாஜஹான் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .