2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

காப்பாற்றப்பட்ட மாடுகள்

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைக்கு சொந்தமான  மாடு அறுக்கும் மடுவத்தில் பெண் இன மாடுகளையும் குட்டித்தாச்சி மாடுகளையும் அறுக்க  முற்பட்ட வேளையில் காத்தான்குடி நகரசபைத் தலைவர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காத்தான்குடி மடுவத்தில் மாடுகள் அறுக்கவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவருக்கு கிடைத்த தகவலையடுத்து, நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பர் உடனே குறித்த இடத்திற்கு சென்று  அதனை தடுத்து நிறுத்தியுள்ளடன், அம்மாடுகளையும் காப்பாற்றி  மடுவத்தில் கட்டிவைத்தார்.  45 பெண் மாடுகளையும் 40 குட்டித்தாச்சி மாடுகளையும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் காப்பாற்றியுள்ளார்.

மேற்படி மாடுகளை அறுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்ககை எடுக்கவுள்ளதாகவும் நகரசபைத் தலைவர் அஷ்பர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .