Suganthini Ratnam / 2011 மே 13 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரிலோஹித்)
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறவனங்களுடனான கலந்துரையாடலொன்று அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்,
உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களில் நடைபெற்று வரும் தவறுதலான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் வேலைத்திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும். தவறான செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும். உள்ளூர் நிறுவனங்களின் கணக்கு அறிக்கைகள் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளர்கள் மூலம் ஆராயப்பட்டு சரியானமுறையில் பேணப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் அங்கத்துவம் வகிக்கும் 28க்கும் மேற்பட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் கமலதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago