Suganthini Ratnam / 2011 மே 13 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
தமது கைக்குழந்தையை பயன்படுத்தி நீண்டநாட்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படும் கணவனையும் மனைவியையும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 3 கையடக்கத் தொலைபேசிகளும் அவற்றுக்கான சிம் அட்டைகளும் 26 பவுண் தங்கநகைகளும் 3 கையடக்கத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை, திருக்கோயில், மன்னார் உட்பட நாட்டின் 9 பகுதிகளிலுள்ள வீடுகளில் கைக்குழந்தையுடன் வீட்டில் சில நாட்களுக்கு வீட்டில் தங்குவதற்கான அனுமதி கேட்டு பின்னர் குறித்த வீட்டுக்காரர்களை ஏமாற்றி அவ்வீடுகளிலுள்ள தங்கநகைகளையும் கொள்ளையிடுவதில் ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேக நபர்கள் கல்லடியில் கைது சய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .