Menaka Mookandi / 2011 மே 13 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் எருமை மாட்டை அறுத்து விற்பனைக்காக வைத்திருந்த மூவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்ததுடன் இறைச்சியையும் அவற்றினை கைப்பற்றி இன்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இது தொடர்பான வழக்கினை விசாரித்த வாழைச்சேனை நீதவான் ஏ.எம்.எம்.றியால், குறித்த சந்தேக நபர்களை 10,000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியை அழித்து விடும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
thahir Saturday, 14 May 2011 06:59 AM
நல்ல பாடம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .