Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
அமெரிக்க நாட்டு இந்து சமயத்துறவியாக திருகோணமலை, செல்வநாயகபுரத்தில் வாழ்ந்து சமாதியடைந்த ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் சுவாமியின் 61ஆவது ஜனனதின வைபவம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் மட்டக்களப்பு நகரத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தந்திரதேவா மகராஜ் சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வும் ஆன்மீக நிகழ்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இலங்கை நாட்டிலும், இந்துக்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் இந்து ஆன்மீகத்தை பரப்பிய அருளாளர், ஆன்மீக வள்ளல் ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் ஆவார்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வுகள் மட்டக்களப்பு வீரகத்தி ஆலயத்துக்கு முன்னுள்ள சுவாமியின் சிலை அருகாமையில் நடைபெறவுள்ளன.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago