Suganthini Ratnam / 2011 மே 15 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித், அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் சந்தியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவன் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரானைச் சேர்ந்த பூபாலப்பிள்ளை கனகம்மா (வயது 70) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
இவர்கள் வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து, வாழைச்சேனை நோக்கி வந்த சிறிய கப்ரக லொறியே இவர்கள் மீது மோதியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேகமாக வந்த லொறி கடைக்குள் உள்நுழைந்ததுடன், அக்கடையையும் சேதமாக்கியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கிண்ணையடியைச் சேர்ந்த கந்தசாமி ரவி (வயது 13) என்ற சிறுவன் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
இவ்விடத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் ஒருவர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago