2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Super User   / 2011 மே 17 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, பெரிய கல்லாறு பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் இருந்து ஆணின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலையில் மீட்கப்பட்டள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்;தார்

பெரிய கல்லாறு இரண்டாம் பிரிவு பொன்னம்பலம் வீதியில் உள்ள பாக்கியராசா ஜீவகரன் (வயது-41) என்பவரே இவ்வாறு  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் மனiவியுடன் தகராறு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேல் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் சம்பவ தினமான இன்று வீட்டிலிருந்து நீண்ட நேரம் வெளியில் வராததையடுத்து அயலவர்கள் சென்று பார்த்தபோது கட்டிலின் அருகில் சடலமாக காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .