2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு வளவில் சடலம் புதைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிப்பு

Super User   / 2011 மே 17 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டு வளவிற்குள் சடலமொன்று புதைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.

காத்தான்குடி 06ஆம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் சடலம் புதைக்கப்பட்டள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வளவில் வசித்து வந்த  27வயமான புகாரி றிஸ்வியா எனும் பெண் கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போயுள்ளார். அப்போது இப்பெண் ஐந்து மாத கர்ப்பிணி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் தலைமைறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள்  காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சடலத்தை தோண்டுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .