Menaka Mookandi / 2011 மே 17 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோராவெளி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்திற்காக நண்பாகளுடன் சென்ற இளைஞன் ஒருவர் கோராவெளி ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த சுப்பிமணியம் சிவசாமி (வயது 26) என்ற மேசன் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது சடலம் வாழைச்சேனை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உற்சவத்தின் இறுதி நாளாகிய இன்று ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது. இதனால் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று குளித்துக்கொண்டிருந்த வேளையிலே மேற்படி இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
9 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
49 minute ago