2026 மே 04, திங்கட்கிழமை

இடம்பெயர்ந்து காத்தான்குடியிலுள்ள மக்களை மீள்குடியமர்த்த கோரிக்கை

Kogilavani   / 2012 மார்ச் 21 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள நொச்சிமுனைக் கிராமத்திலிருந்து அசாதாரண சூழ்நிலையினால் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து காத்தான்குடியில் வாழ்ந்து வரும் குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மட்டக்களப்பு மாநகர சபை மேயருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையினால் நொச்சிமுனைக் கிராமத்தில் குடியிருந்த 32 முஸ்லிம் குடும்பங்கள் அங்கிருந்து அகதிகளாக காத்தான்குடிக்கு இடம்பெயர்ந்தனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இதுவரை காலமும் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 10 ஏக்கர் காணியொன்றில் அகதிகளாகவே குடியிருந்து வருகின்றனர்.

தற்போது யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு மீளக்குடியேறும் சூழ் நிலையில் இந்த நொச்சிமுனைக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களையும் மீள் குடியேற்றம் செய்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீடின் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக முர்த்திமுரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .