2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் திவிநெகும எழுச்சி குடிசைக் கைத்தொழில் கண்காட்சி

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, எஸ்.வதணகுமார், லோஹித்)


மட்டக்களப்பில், திவிநெகும எழுச்சி குடிசைக் கைத்தொழில் கண்காட்சி இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகஜன கல்லூரி மண்டத்தில் நடைபெறும் இக் குடிசைக் கைத்தொழில் கண்காட்சியினை பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.ஞானசூரி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இக் கண்காட்சி நாளை நாளை  ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியின் போது, சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார தொழில் வழிகாட்டல்கள், அவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இக் கண்காட்சியில் குடிசைக்கைத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு தேவையான நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளதுடன், அதற்கான பயிற்சி முறை தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோன்று சிறியளவில் குடிசைக் கைத்தொழிலை மேற்கொள்பவர்களுக்கு ரூபா 10ஆயிரம் பெறுமதியான  இயந்திரம் அல்லது பணம் இங்கு வழங்கப்படவுள்ளதுடன் பாரியளவில் குடிசைக கைத்தொழிலை மேற்கொள்ள இருப்பவர்களுக்கான நிதியினை பெறுவதற்கான நிதி நிறுவனங்களை ஒருங்கிணைந்து வழங்கும் நடவடிக்கைளும் நடைபெறவுள்ளன.

இந்த கண்காட்சியில் நிதி நிறுவனங்கள், தொழில் பயிற்சி மற்றும் இயந்திர சாதன மற்றும் கைத்தொழில் ஆகியவற்றின் நிறுவனங்கள் உட்பட சுமார் 23 நிறுவனங்களின் காட்சிககூடங்களும், பெருந்தொகையான கைத்தொழிலாளர்களின் காட்சிக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .