2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் வைத்தியர் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2012 மார்ச் 31 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் சீரான, திருப்தியான சிகிச்சையை வழங்க ஆகக் குறைந்தது 60 வைத்தியர்களும், ஆகக் கூடியது 120 வைத்தியர்களும் தேவை என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.எம்.தேவராஜன் தெரிவித்தார்.

தற்போது 120 வைத்தியசாலைகளிலும் 45 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் பணிபுரிய 500 டாக்டர்களே உள்ளதாகத் தெரிவித்த அவர், ஏதோ ஒரு அளவில் சமாளித்து நோயாளிக்கு சிகிச்சை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் கடமை புரிய 50 தாதியர்கள் இன்னும் தேவை எனத் தெரிவித்த பணிப்பாளா டாக்டர் எம்.தேவராஜன் 60 குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள் தேவை எனக் குறிப்பிட்டார்.

களுவாஞ்சிகுடி, கல்லாறு, வாகரை உட்பட படுவான்கரைப் பிரதேச வைத்தியசாலைளில் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .