2026 மே 04, திங்கட்கிழமை

சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நொச்சி முனைக்கிராமத்தில் சுனாமி அனர்த்த ஒத்திகை நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பிலுள்ள முப்படைகளின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய  மட்டக்களப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் இவ் ஒத்திகை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுவது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் நொச்சிமுனை கிராமம்,  பூநொச்சிமுனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவனத்தினரும் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்த ஒத்திகை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிகேடியர் கேர்ணல் ஏ.ஏ.எஸ்.பி.திலகரட்ண, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.இன்பராஜா, அதன் அதிகாரி எஸ்.ஏ.அல்தாப், உட்பட படை அதிகாரிகள் நொச்சிமுனை கிராமத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .