2026 மே 04, திங்கட்கிழமை

இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறி

Kogilavani   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஜவீந்திரா)


இந்து அறநெறிப் பாடசாலைகளில் கற்பிக்கும் இந்து தர்ம ஆரிரியர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சி நெறி நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமாகி நேற்றுடன் முடிவடைந்தது.

இந்து காலாசார திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி குமரன், தலைமையில் மட்டக்களப்பு தன்னாமுனை கருணாலய இல்லத்தில் இப் பயிற்சி நெறி நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 இற்கு மேற்பட்ட இந்து தர்மாசியர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாசிரியர்கள் எதிர்கொள்ளவுள்ள இந்து தர்மாசிரியர் பரீட்சையினை மைபப்படுத்தி இப்பயிற்சி நெறி நடைபெற்றது.

இங்கு கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சைவ வித்துவான் வசந்தா வைத்தியநாதன், சைவப்புலவர் செல்லத்துரை, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பல வளவாளர்கள் கலந்து கொண்டு விரிவுரைகளை நடத்தினர்.

பயிற்சி நெறியின் இறுதியில் இந்து கலாசார திணைக்களத்தினால் கலந்து கொண்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு பெறுமதிவாய்ந்த புத்தகங்களும் வழங்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .