2026 மே 04, திங்கட்கிழமை

விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கான ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் முகமாக அப்பகுதி விவசாயிகளுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில்,  பயிர்ச்செய்கைகளை பாதுகாப்பதற்காக துப்பாக்கி கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கான நேர்முகப்  பரீட்சையை பிரதேச செயலகங்களில் நடத்துமாறு  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலாளர்களுக்கும் அம்மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடித மூலம் அறிவித்துள்ளார்.

விவசாயம் மேற்கொள்ளும் காணியின் உறுதி விண்ணப்பதாரினுடையதாக  இருத்தல் வேண்டும்  அல்லது மனைவியின் பெயரில் காணியிருப்பின் விவாகச் சான்;றிதழ் இருத்தல் வேண்டும். விவசாயம் செய்யும் இடத்தின் விஸ்தீரணம் 5 ஏக்கருக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். பயிர்ச்செய்கை பற்றியும் எவ்வகை மிருகத்தினால் பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றதென்பது பற்றியும் குறிப்பிட்டிருத்தல் வேண்டும்.

மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தி கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுக் கடிதம் போன்ற ஆவணங்கள் வைத்திருப்பது குறித்து நேர்முகப் பரீட்சையின்போது  பரிசீலிக்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தகைமைகளை, துப்பாக்கி கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் கொண்டுள்ளார்களா என்பதை பரிசீலித்து அவசியம் துப்பாக்கி தேவையானவர்களை இனங்கண்டு அவர்களின் பெயர், விபரங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளனார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .