2026 மே 04, திங்கட்கிழமை

திவிநெகும திட்டத்தின் கீழ் மீன்பிடி வியாபாரிகளுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித், சுக்ரி)

 
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மீன்பிடி வியாபாரிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மீன்கள் கொள்வனவு செய்யும் பெட்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை  பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு இப்பொருட்களை வழங்கி வைத்தார்.
 
இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் உரையாற்றுகையில்,

'எமது பிரதேசத்தில் சுயதொழில் புரிபவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதோடு அதற்கான பல வேலைத் திட்டங்களையும் செயற்படுத்தி வருகின்றோம்.
 
இன்று கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் துரிதமாக அவிவிருத்தி அடைந்து வரும் இவ்வேளையில் சுயதொழில் புரிபவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
 
சுயதொழில் புரிபவர்கள்; தொழில் ரீதியாக எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் எமது ஜனாதிபதியினால் செயற்படுத்தப்படுகின்ற பல திட்டங்களில் சுயதொழிலாளர்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய பல திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன.
 
இவ் உபகரணங்கள் மூலம் பல சுயதொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடையும் என்ற நம்பிக்கையும் சந்தோசமும் எனக்கிருக்கின்றது. தொடர்ந்தும் சுயதொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி சுயதொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்'; எனக் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் ஆ.தேவராஜா, பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் பயனாளிகள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .