2026 மே 04, திங்கட்கிழமை

கிராமப்புறங்களுக்கும் நகரப்புறங்கள் போன்று சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் : கிழக்கு முதல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)
 
கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி கண்டுவருகின்ற இவ்வேளையில் கிராமப்புறங்கள் நோக்கியும் சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப்படவேண்டும். அதனடிப்படையில் நாம் பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட செங்கலடியில், நேற்று திங்கட்கிழமை புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
பிரதேச வைத்திய அதிகாரியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இடம்பெற்றது.
 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'எமது கிழக்கு மாகாணம் துரிதமாக அபிவிருத்தி அடைந்து வரும் இவ்வேளையில் எமது மக்களின் சுகாதார நலன் விடயங்களிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அதன் அடிப்படையிலேதான் நாமும் செயற்பட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களை நோக்கிய சுகாதார வசதிகளை மேம்படுத்துகின்ற நடவடிக்கைகள் இன்றைய தேவையாக இருக்கின்றது.
 
கடந்த காலங்களில் கிராமப் புறங்களிலே வாழ்கின்ற எமது மக்கள் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்ததனை நாம் அறிவோம். கிராமப் புறங்களிலே பல கர்ப்பிணித் தாய்மார்கள் தமது சுகாதார சேவைகளைப் பெறுவதற்காக நீண்டதூரம் பயணம் செய்து வெயிலிலே அலைந்து திரிகின்ற நிலைமை இருந்தது.
 
அவ்வாறான நிலை இனிமேலும் எமது மக்களுக்கு ஏற்படக்கூடாது. இதில் நாமும் உறுதியாக இருக்கின்றோம். அதனடிப்படையில் நாம் ஜனாதிபதிக்கும் நன்றி கூறவேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது மக்களுக்காக சுகாதாரத்துறை சார்ந்த பல திட்டங்களை ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார்.

நகரப் புறங்களில் எவ்வாறு சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றதோ அதேபோன்று கிழக்கு மாகாணத்தின் கிராமப்புறங்களிலும் சுகாதார வசதிகள் விஸ்தரிக்க வேண்டும் என்பதற்காக நாமும் செயற்பட்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சதுர்முகம், பிரதேச செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகளும் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .