2026 மே 04, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய குழந்தைகள், பெரியவர்களுக்கான ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, கல்லடி வேலூர், நொச்சிமுனை ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற சுமார் 40 விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு காத்தான்குடி கடற்கரை திடலில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு எகெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமாதானப் பிரிவின் ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது.

இவர்களுடன் கரித்தாஸ் எகெட் நிறுவக திட்ட இணைப்பாளர் எஸ்.ஓ.ஜெயானந்தம், நிர்வாக உத்தியோகஸ்தர் பி.என்.கே.மூர்த்தி, மனித உரிமைப் பிரிவு இணைப்பாளர் எம்.றொபின்சன், சமாதானப் பிரிவினைச் சேர்ந்த ஐ.கிறிஸ்ரி, ஊக்குவிப்பாளர் ஏ.சுமதி, ஊடகப்பிரிவு பொறுப்பாளர் எஸ்.மைக்கல் மற்றும் களஉத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

விசேட தேவையுடைய பிள்ளைகள் பாடல், நடனம் கதை போன்ற நிகழ்வுகளை செய்துகாட்டினர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .