2026 மே 04, திங்கட்கிழமை

மத்தியஸ்த்த சபைகளுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறு அறிவிப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மத்தியஸ்த்த சபைகளுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறு மத்தியஸ்த்த சபைகளின் செயலாளர் வாசனங் குணவர்த்தன மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, மற்றும் ஏறாவூர் ஓட்டமாவடி மண்முனை வடக்கு(மட்டக்களப்பு), செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மத்தியஸத்த சபைகளுக்கே இப் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மேற்படி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு ஒருவர் வீதம் புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன்  இவ்வாறு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது பத்து வருடம் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவராகவும் நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மக்களால் எற்றுக்கொள்ளக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் அரச தனியர் நிறவனங்களில் கடமையாற்றுபவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்களை தெரிவு செய்வது சிறந்தது எனவும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .